தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில்; அமைச்சர் எ.வ. வேலு,ஆய்வு!

செங்கல்பட்டு, ஜூலை. 18: தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையை கடந்து ரயில் நிலையம் செல்லுவதற்கு கட்டப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் மற்றும் தாம்பரம் நீதிமன்றம் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு ஆகிய பகுதிகளை, பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.
ராஜாவுடன் ஆய்வு மேற்கொண்டு உடனே பணிகளை துரிதமாக முடிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.
ராஜா, தாம்பரம் வியாபாரிகளின் கோரிக்கையான சண்முகம் சாலையை ஜி.எஸ்.டி சாலையுடன் இணைக்க வழிவகை செய்யுமாறு கோரிக்கை வைத்தார். ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர்கள் கோதண்டராமன், முருகேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.