2023-24-க்குள் ரூ 1.22 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை கோல் இந்தியா நிறுவனம் செய்ய உள்ளதாக பிரகலாத் ஜோஷி தெரிவிக்கிறார்

2023-24-க்குள் 1 பில்லியன் டன்கள் நிலக்கரி உற்பத்தியை எட்டவும், நிலக்கரியில் நாட்டை தற் சார்பாக்கவும், நிலக்கரி தோண்டியெடுப்பு, உள்கட்டமைப்பு, திட்ட மேம்பாடு, ஆய்வு மற்றும் தூய் மையான நிலக்கரி தொழில்நுட்பங்கள் தொடர்புடைய 500 திட்டங்களில் ரூ 1.22 லட்சம் கோடி க்கும் அதிகமான முதலீட்டை கோல் இந்தியா நிறுவனம் செய்ய உள்ளது. மேற்கண்ட தகவலை, பங்குதாரர்களுடனான காணொளி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். “நிறுவனத்தின் விவகாரங்களில் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் ஈடுபடுத்துவது திட்ட அபாயங்களைக் குறைத்து அவற்றை வெளிக்கொண்டு வரும். இத்தகைய இரு-வழி உரையாடல்கள் புதிய சிந்தனைகள், மேம்படுத்தப்பட வேண்டியப் பகுதிகள் மற்றும் திட்டம் சார்ந்த எதிர்பார்ப்புகளில் இரு தரப்புக்கும் நன்மை விளைவிக்கும்,” என்று ஜோஷி கூறினார். பங்குதாரர்களிடையே உரையாற்றிய அமை ச்சர், கோல் இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகள் ஏராளமானது என்றார். அதன் 49 முதல் மைல் இணைப்பு திட்டங்களில், இரு கட்டங்களாக, 2023-24-க்குள் ரூ 14,200 கோடியை நிறுவனம் முதலீடு செய்யும்.