சென்னை நீலாங்கரையில் ஐபி நகர் மகேஷ் குமார் என்பவர் வீட்டில் வெளியூர் சென்றிருந்தபோது 14.05.2025 அன்று வீட்டை உடைத்து தங்க நகைகள் வெள்ளிப் பொருட்களுடன் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் அவ்வீட்டின் காவலாள்யாக பணி செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து கொள்ளயடிக்கப்பட்ட 65 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்.
65 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த காவலாளி மனைவியுடன் கைது
