“டிரெண்டிங்” திரைப்படம் ஜூலை 18 ல் வெளியீடு

ராம் பிலீம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில்  உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள் கலையரசன் நாயகனாக நடிக்க,  பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார், பிரேம்குமார் பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா பிரியங்கா, கௌரி, பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின் அறிமுக நிகழ்வில. நடிகர் கலையரசன் பேசியதாவது: “ இப்படம் எனக்கு  மிக முக்கியமான படமாக இருக்கும். நான் கதாநாயகனாக  பல படங்கள் செய்துள்ளேன் அதில் இது வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும். வேறொரு படம் செய்வதாக ஆனந்த் அண்ணாவுடன் பேசிக்கொண்டிருந்தோம், சிவராஜ் இந்தக்கதை சொன்ன போது எல்லோருக்கும் பிடித்தது. அவரை நோலன் என்று தான் எல்லோரும் கூப்பிடுவோம். அவரைப்பார்த்தால் போலீஸில் இருந்தவர் போலவே தெரியாது. மிகத்திறமையானவர். குறைந்த நடிகர்களை  வைத்து 2 மணி நேரம் உட்கார வைப்பது எளிதான  விசயமில்லை, அதை சிவராஜ் செய்துள்ளார். மியூசிக் கேமரா, நடிப்பு எல்லாம் சேர்ந்து தான் ஒரு சினிமாவில் மேஜிக் நடக்கும்.  சாம் சிஎஸ் மிக பிஸியாக இருந்தார், ஆனால் நாங்கள் கேட்டதற்காகச் செய்து தந்தார்.  பிரவீன் அவரோட சொந்தப்படம் போல அக்கறை எடுத்துக்கொண்டு செய்தார்.*******

இருவரால் இப்படத்தில் மேஜிக் நடந்துள்ளது. அலெக்ஸ் இதில் முகமில்லாமல் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். முகமே தெரியாமல் இருந்தாலும் நடித்தற்கு நன்றி. தயாரிப்பு தரப்பு முழு நம்பிக்கை வைத்தார்கள் அவர்களுக்கு நன்றி. நண்பன் ஶ்ரீகாந்த் இப்படம் முழுமையாக முக்கிய காரணம் அவனுக்கு நன்றி.  தயாரிப்பில் முழு வேலையும் பார்த்தார். என் மனைவி பிரியா தான் உடை அலங்காரம் செய்துள்ளார் அவருக்கு நன்றி. இது கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். கண்டிப்பாக “டிரெண்டிங்” நல்ல படமாக இருக்கும் நன்றி. 

இயக்குநர் சிவராஜ் பேசியதாவது..,  இந்த இடத்திற்கு வர முக்கியமான காரணம் பிரவீன் தான், நான் ஊரில் இருக்கும் போது, ஷார்ட் ஃபிலிம் எழுதிக்கொண்டிருந்தேன், பிரவீன் உதவியால் தான் அந்தப்படம் நடந்தது. அது தான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது. இந்தக்கதை பிரவீனிடம் சொன்ன போது அவர் கலையரசனிடம் அழைத்துப் போனார், ஒன்லைன் சொல்லி உடனே ஓகே ஆகிவிட்டது. இது சோஷியல் மீடியா தம்பதி பற்றிய கதை. நான் மினிமிலிஸ்ட் படம் செய்யலாம் எனத் தான் ஆரம்பித்தேன் ஆனால் கலையரசன், சாம் சிஎஸ் என பெரிய படம் ஆகிவிட்டது. சாம் சிஎஸ் அனுபவம், திறமை இப்போது திரையில் பார்க்கும்போது தெரிகிறது. நாங்கள் இந்தப்படம் செய்யும் போது, 22 படங்கள் அவர் கையிலிருந்தது. இந்தப்படம் செய்ததற்கு நன்றி. தயாரிப்பில் முழுமையாக எனக்கு ஆதரவு தந்தார்கள், எனக்கு உறுதுணையாக இருந்த ஶ்ரீகாந்த் அவர்களுக்கு நன்றி. இது உருவாக்கத்தில் சின்ன படம் ஆனால் பேசும் விசயத்தில் பெரிய படம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன், மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன். நன்றி.

தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் பேசியதாவது… டிரெண்டிங் திரைப்படம் எங்களின் சின்ன முயற்சி, நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன். கலையரசன் மிகச்சிறந்த நடிகர் அவருக்கு இணையாக பிரியாலயா நன்றாக நடித்துள்ளார்.  இயக்குநர் சிவராஜ் இந்தக்கதையைச் சொன்ன போதே, எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சாம் சிஎஸ் சிறப்பான இசையை தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிரவீன் சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.