சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, சேலையூர், அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்;ட விஜயநகரம், பள்ளிக்கரணையில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டு உரிமையாளர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மேற்படி, பாதிக்க்பபட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டது. புலன் விசாரணையின் போது, பாலாஜி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்;. புலன. விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு பாலாஜி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கானது 09.05.2024 அன்று செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ப்பட்டு,

நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது 16 சாட்சிகளை விசாரணை செய்யப்பட்டு, 11 சான்று ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய சட்டப்படி நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி, நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என தீர்மானித்து கீழ்கண்டவாறு தண்டனையை 25.07.2025 அன்று வழங்கியுள்ளது. சிறுமியை பாலியல் வண்கொடுமைக்காக கடத்திய குற்றத்திற்க்காக 10 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1000ஃ- அபராதம்,குற்றமுறு அச்சுறுத்தல் செய்தமைக்காக 2 வருடம் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் பாலியல் வன்கொடுமைக்காக 20 வருடம் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு நிதியாக ரூ.4,00,000 வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதிலும், தங்களின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் நிலை நிறுத்துவதிலும், தாம்பரம் மாநகர காவல்துறையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

-தங்க முகையதீன்-