இந்தியத் திருநாட்டின் 78 ஆம் ஆண்டு விடுதலைத் திருநாளை முன்னிட்டுப் புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பின் சார்பில் “பாரதியின் பாடல்களும் கலை இலக்கியப் பகிர்வும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கமும் பாரதி பாடல்கள் காணொளி வெளியயீட்டு விழாவும் 05.08.2025 அன்று புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் அமைந்துள்ள அலையன்ஸ் ப்ரான்சே நிகழ்த்து கலையரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வானது செம்மொழித் தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பகிர்வினை வெளிப்படுத்தி இரு மொழி வளர்ச்சிக்கும் பயன்படும் வகையில் அமைய உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டு ஆளுமைகளும் பிரெஞ்சுப் பண்பாட்டு ஆளுமைகளும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்விற்காக புதுச்சேரி அலியன்ஸ் பிரான்சே நிறுவனத்தின் இயக்குநர் திரு. லொரான் ஜலிகு அவர்களை நண்பர்கள் தோட்டத்தின் தலைவர் ப. திருநாவுக்கரசு, செயலாளர் கலைமாமணி முனைவர் சுந்தர முருகன், பொருளாளர் கவிஞர் புதுவை யுகபாரதி மற்றும் நண்பர் வீரப்பன் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இயக்குநர் அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதற்குப் பெருமை அடைவதாகவும் அவர் விழாவில் கலந்து கொண்டு இந்திய விடுதலை மற்றும் பிரென்ச் மொழி செம்மொழித் தமிழ், இந்திய பிரெஞ்சு நாடு குறித்தும் உரையாடுகிறேன் என்று உறுதியளித்தார்.
இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு நண்பர்கள் தோட்டம் நடத்தும் பிரெஞ்சு செம்மொழித் தமிழ் கலை இலக்கிய விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சே இயக்குநரை கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் நேரில் அழைப்பு
