-தங்க முகையதீன்-
————–
சென்னை,ஜன.16- தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் திருவிழா சென்னையில் நடந்தது. இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவி கவிதா தலைமையேற்று நடத்தினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், நடிகர் அக்ஷய் குமார், ஒளிப்பதிவளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டார்கள். விழாவுக்கு வந்து சிறப்பித்தவர்கள் சங்க செயலாளர் கோடங்கி ஆபிரஹாம் வரவேற்றுப் பேசினார். நிகழ்சியை சங்க அங்கத்தினர் செல்வி. சுஷ்மா தொகுத்து வழங்கினார். சங்கத்தின் தலைவி கவிதா ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமிடம் “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஶ்ரீராம், “தோல்விதான் எனது வெற்றிக்கு காரணம். தோல்விதான் வெற்றிக்கான தேடல்” என்றார். காதலைப்பற்றிய கேள்விக்கு பதிலளித்த பி.சி.ஶ்ரீராம், “ரகசியமாக இருந்தால் தான் அது காதல். பலருக்கும் அது தெரிந்துவிட்டால் சுவாரசியம் இருக்காது. காதலை மனதுக்குள் வைத்து போற்றி பாதுகாக்க வேண்டும்”. என்றார்.

