“எங்களையும் வாழ விடுங்கள்” – நடிகர் மன்சூரலிகான்

மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ளஆல் பாஸ்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது. ‘ஆல் பாஸ்’  அற்புதமான படம், “நான் கருப்பு படத்தில் உச்சக்கட்ட காட்சியில் நசனம் ஆடினேன் ஆனால் அதை அப்படியே தூக்கிவிட்டார்கள், என்ன அநிநியாயம் இது, யூடுயூப்பில் வெளியிடுவோம் என்று அதையும் செய்யவில்லைசூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாகநடிகராக தயாரிப்பாளராக இருக்கிறேன்எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும்நீங்களே பாருங்கள். உடனே வாட்ஸ்அப், மீடியா என்று எதை எதையோ வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி தப்பாகஎழுதுகிறார்கள். எங்களுக்கு வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ, கீழே போய் உட்கார்ந்து கொண்டு, ‘உன் பையன் கஞ்சா அடிக்கிறான், பைத்தியக்காரன்என்று என்னென்னவோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் என்ன நல்ல வேலை செய்தேன் என்று நினைத்தாலும், கீழே போய் அதை கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு அழுக்குப்படுத்தும் சனியன்கள் நாட்டில்சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதுதான் வேலை. எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.ஆல் பாஸ்ஒரு அற்புதமான பெயர். இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றிசொல்லிக் கொள்கிறேன்.*******

குறிப்பாக ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் மரியாதை செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது. சினிமாவில் வேலை செய்யும்ஒவ்வொருவரையும், விளம்பர மீடியா உள்ளிட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். இது என்னுடைய ஊர், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய சினிமா. ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுடைய வேலையைஉண்மையாகச் செய்தாலே போதும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. நன்றி, வணக்கம், வாழ்த்துகள்என்றார்.