‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது

வெற்றிப் படமான ‘மரகத நாணயம்’ வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் இணைந்திருக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிப் பெற்றது. தனது கதாபாத்திர தேர்வின் மூலம் பல மொழிகளில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஆதிக்கும், இப்படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே, ரசிகர்களும் திரையுலக வட்டாரமும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன், இந்த இரண்டாம் பாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றியுள்ளார்..*********

பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், மணிஷ் சிங்கால், துர்காராம் செளத்ரி, தேவ் மற்றும் கே.வி. துரை ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆதி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

இசையமைப்பாளர் – திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவாளர்கள் – தீபக் மேனன் மற்றும் பி.வி. சங்கர்,
கலை இயக்குநர் – என்.கே. ராகுல்,
படத்தொகுப்பாளர் – திருமலை ராஜன் ஆர்.,
வசனகர்த்தா – ராஜேஷ் கண்ணன்,
சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்