லைக்கா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜோசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷான், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஜிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி, ஷீலா ராஜ்குமார், மஹாலட்சுமி, கமலேஷ், கிரண் கொண்டா, நாக சாய் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சிக்மா”. சந்தீப் கிசானுக்கு பழங்காலத்து நூலகம் ஒன்று சொந்தமாக உள்ளது. அதே வேளையில் கோடிக்கணக்கில் கடனும் உள்ளது. அந்த கடனை அடைக்க சூதாட்ட விடுதிக்குச் சென்று சூதாடுகிறார். சூதாட்டத்தில் இருந்த பணத்தையும் இழக்கிறார். இந்நிலையில் தாதாவாக இருக்கும் சம்பத் ராஜுவின் 1000 கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கி லாக்கரில் இருக்கிறது. அதற்குறிய சாவி சந்தீப் கிஷான் கையில் கிடைக்கிறது. அதன் தொடர்ச்சியாக பல ஆபத்த்துக்களும் சந்தீப் கிஷானுக்கு காத்திருக்கிறது? அது என்ன ஆபத்து? அதிலிருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? வெளிநாட்டு வங்கி லாக்கரிலிருக்கும் 1000 கோடி ரூபாய் என்ன ஆனது? என்பதுதான் கதை,
சந்தீப் கிஷன் கலகலப்பாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்துவிட்டார். அதிரடி காட்சிகளில் பின்னி பிடலை எடுக்கிறார். உணர்வுபூர்வமான் நடிப்பு உடல்மொழியால் அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறார். ஃபரிதா அப்துல்லா குறைவின்றி தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்துள்ளார். நகைச்சுவை காட்சிகளில் அன்புதாசனின் வசனங்கள் பார்வயாளர்களுக்கு சலிப்புத்தட்டாமல் பார்த்துக் கொள்கிறது. அழுத்தமில்லாத வில்லத்தனம் திரைக்கதையை இலகுவாக கடத்தி செல்கிறது. மேடு பள்ளம் நிறைந்த பாதையில் திரைக்கதையை தள்ளாடி தள்ளாடி ஓட்டியிருக்கிறார் இயக்குநர் ஜோஜன் சஞ்சய். பெரியளவில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. இயக்கத்தில் அவருக்கு இது முதல் படிதான். இன்னும் பலபடிகள் ஏற பரிணாம வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்.

