‘கானா’ எனும் தென்றலை ரொறன்ரோ நகரில் ‘தெறிக்க’ விடுவதற்காக கனடா வந்துள்ள ‘தேனிசைத் தென்றல்’ தேவாவையும் அவரது குழுவினரையும் வரவேற்ற உதயன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

15-08-2026 சனிக்கிழமையன்று  8100 Steels Avenue East- Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள  MARKHAM MEADOW திறந்த வெளி அரங்கில் நடைபெறவுள்ள  ‘தேனிசைத் தென்றல்- Live in Concert  என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து  கலந்து  கொண்டு  ‘கானா’ எனும் தென்றலை  ரொறன்ரோ நகரில் ‘தெறிக்க’ விடுவதற்காக  கனடா வந்துள்ள ‘தேனிசைத் தென்றல்’ தேவாவும் அவர் குழுவினரும் 12ம் புதன்கிழமையன்று காலை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள்.

அங்கு குழுமியிருந்த பத்திரிகை ஆசிரியர் மற்றும் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் ரசிகர்கள் அனைவரும் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவும் அவர் குழுவினரும் வந்திறங்கிய அந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

கனடா உதயன் உட்பட பல ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பையும் தங்கள் சமூக ஊடகத் தளங்கள் ஆகியவற்றின் ஊடாக இசை  ரசிகர்களுக்கு கொண்டு சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது- அனுமதிச் சீட்டுக்களுக்கும்ய விபரங்களுக்கும்  647 600 5297 என்னும் இலக்கத்தை அழைக்கவும்