பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி பாடகி ஷர்மிளா சிவகுருவுக்கு மருத்துவ நிதி வழங்குவதற்காக, மலேசிய பாடகர்கள் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி கிளாங்கில் உள்ள எஸ்.டி.ஆர். ஈவெண்ட் மண்டபத்தில் இசைக் கச்சேரி நடத்தினார்கள். இக்கச்சேரியில் ஆர்.எஸ்.ரவீந்திரன், மதியழகன், மேகநாதன் உள்பட மலேசிய கலைஞர்கள் அர்ப்பணிப்புடன் பாடினார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் ரொக்கமாக 18,650 வெள்ளி வசூலானது. அத்துடன் காசோலையாக 2000 வெள்ளி வசூலானது. மொத்தமாக வசூலான 20,650. வெள்ளியை அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஏற்பாட்டுக் குழுவினர் மருத்துவ நல உதவி நிதியாக ஷர்மிளா சிவகுருவிடம் வழங்கினார்கள். அவர் நன்றியுடன் அத்தொகையை பெற்றுக் இந்த நற்பணி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற நிதியுதவி வழங்கியவர்கள், அனுசரணையாளர்கள், ஆதரவு அளித்தவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களின் தாராள மனப்பான்மை, அன்பு மற்றும் ஆதரவு ஆகியவை திரு. சிவகுரு அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளன. இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட ஒவ்வொரு காசும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், நிகழ்ச்சியின் மேடையிலேயே திரு. சிவகுரு அவர்களிடம் ஒப்படைக்க பட்டது. ஒற்றுமை, இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றின் மூலம் நமது நற்பணியின் இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்” என்று அறிவித்தார்கள்.

ஷர்மிளா சிவகுரு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சிக்காக மறைந்த ராஜராஜ சோழனுடன் பாடிய “கரும்பாக இனிக்கின்ற பருவம்” என்ற பாடலும், ரகுவுடன் பாடிய “தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா? என்ற பாடலும், பிரிட்டோவுடன் பாடிய “காவியமா நெஞ்சின் ஓவியமா” என்ற பாடலும், “எல்லாமே நீதான் வல்லோனே யா அல்லாஹ்” எனற இஸ்லாமிய பாடலும் இன்றளவும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல்களை பாடியவர் ஷர்மிளா சிவகுரு என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பாட எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக.


