சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தலைமையில் காவல்துறையினருடன் இ-பதிவு குறித்தான பயிற்சியுடன் கூடிய கலந்தாய்வு கூட்டம்

சென்னை பெருநகர காவல்துறை, 12 காவல் மாவட்டங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்களில் தாக்கலாகும் குற்றவியல் வழக்குகளின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு, உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்று தந்திடவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை உறுதிபடுத்திடவும், காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பல்வேறு நடவடிக்கைகள் காவல் நிலைய அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், வழக்குகளின் விசாரணை அறிக்கை, நீதிமன்ற கோப்புக்கு எடுக்கப்பட்டு, துரிதமாக விசாரணை நடத்திட எடுக்கப்பட்ட நடவடிகைகளுக்கு இ-பதிவு சேவை (E-filing service) மூலம் நடவடிக்கைகள் பின்பற்றபட்டு வருகின்றன. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான காவல்துறையினுடைய இறுதி அறிக்கை உட்பட விசாரணை சார்ந்த அறிக்கைகள், முறையீடு பதிவுகள், கோப்புகள் கால தாமத நிலைகளால் நீதிமன்ற நடவடிக்கைகளில், சுணக்கம் ஏற்படாத வகையில், வழக்குகளில் முன்னேற்றம் காண சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தலைமையில் காவல்துறையினருடன் இ-பதிவு குறித்தான பயிற்சியுடன் கூடிய கலந்தாய்வு கூட்டம்  (20.09.2025) மாலை, வேப்பேரி காவல் ஆணையரகத்தில் உள்ள 2வது தளத்தில் நடத்தப்பட்டது.

பயிற்சியுடன் கூடிய இக்கலந்தாய்வு, நீதித்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி S.கார்த்திக்கேயன் தலைமையில், 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அருமைசெல்வி, முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் .R.கிரிஜாராணி, 4வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் அனிதா ஆனந்த், 3வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர்  C.சுந்தரபாண்டியன் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுடன் கலந்து கொண்டு காவல்துறையினருடன் கலந்துரையாடினர்.

மேலும்,, சென்னை பெருநகர காவல்துறை ஆய்வாளர்கள், CCTNS மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு தற்சமயம் செயல்முறையில் உள்ள இ-பதிவு மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விரைவாக காவல்துறையின் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான ஒருங்கிணைந்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் நீதிபதிகள், கலந்துரையாடல் நடத்தினர். இந்நிகழ்ச்சியில், முதன்மை அமர்வு நீதிபதி S.கார்த்திக்கேயன்  தற்சமயம் நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையினர் ஒருங்கிணைந்து வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்தி உறுதியான நடவடிக்கைளை எடுப்பதற்கான ஆலோசனைகளையும், இ-பதிவின் இன்றியமையாமை குறித்தும் விளக்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப.,  நடைமுறையில் உள்ள இ-பதிவுகளில் காவல்துறையினருக்கு ஏற்படும் நடைமுறை சிரமங்கள், சந்தேகங்கள் மற்றும் பிழை திருத்தம் குறித்த பதிவு மற்றும் அணுகுமுறைகள், நீதிமன்றங்கள், வழிகாட்டுதல்கள், பின்பற்றுதல் குறித்த விசாரணை வழக்குகளில் முன்னேற்றம் காண்பதற்கு சிறந்த முயற்சியாக எடுத்துக் கொண்டு காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், நீதிமன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிட அறிவுறுத்தினார்.

16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அருமைசெல்வி  இ-பதிவு குறித்தான விவரங்களை டிஜிட்டல் காணொளி மூலம் காவல்துறையினருக்கு விளக்கியும், எழுப்பிய சந்தேகங்களுக்கு விவரங்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் .A.ராதிகா, இ.கா.ப., மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள் .S.செல்வராஜ், இ.கா.ப., .S.S.கீதாஞ்சலி, S.ஆரோக்கியம், B.கீதா (தலைமையிடம்) மற்றும் சென்னை பெருநகர காவல் நிலைய அதிகாரிகள், நீதிமன்ற அலுவல் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.