ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் உயரிய கொள்கையை வலியுறுத்தி செயல்பட்டு வருவது மனுஜோதி ஆசிரமம். ஆன்மீக பார்வையில் திருக்குறள் எனும் நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி மாநகரத்தில் நடைபெற்றது. இவ்விழாவானது மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்றது. .ஸ்ரீமன் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆன்மீக போதனைகளில் இருந்து தேவாசீர் லாறி அவர்களால் இப்புத்தகம் தொகுக்கப் பட்டுள்ளது. அவர் வருங்காலத்தில் உள்ள இளைய சமுதாயம் மற்றும் மாணவச் செல்வங்கள் பயன் பெறும் வகையில் இந்நூலை எழுதியுள்ளார்.
இந்நூலை மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் வழக்கறிஞர் சிவபத்மநாபன் வெளியிட, முதல் பிரதியை வழக்கறிஞர் ராமநாதன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை டாக்டர் ஜான் சுபாஷ் பெற்றுக்கொண்டார். அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குனர் மகா சோமாஸ்கந்த மூர்த்தி புத்தக மதிப்புரை வழங்கினார். பொதிகை தமிழ் சங்க தலைவர் பே.ராஜேந்திரன், ஊத்துமலை ஜமீன் இளையராஜா, இதயவியல் நிபுணர் டாக்டர் இ. அருணாச்சலம் மற்றும் தங்கையா ஸ்வீட்ஸ் உரிமையாளர் ஜிபிஎம் .குமார் ஆகியோர் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள். மனுஜோதி ஆசிரம நிர்வாகிகளான பால் உப்பாஸ் லாறி, லியோ பால் லாறி மற்றும் தேவ இந்திரன் ஆகியோர் இவ்விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக நிர்மல்குமார் அனைவரையும் வரவேற்றார். வினோத் விழாவை தொகுத்து வழங்கினார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் மற்றும் மனுஜோதி ஆசிரம அங்கத்தினர்கள் பலர் இவ்விழாவில் பங்கு பெற்றனர். உலகில் மொழி, மதம் மற்றும் தேச எல்லைகளை எல்லாம் கடந்து நிற்கும் நூலாக விளங்கும் ஒரே நூல் திருக்குறள் என்பது மறுக்க முடியாத உண்மை. மதமில்லாத மனிதர்களாக வாழத் துடிக்கும் மனிதர்களுக்கு ஒரு வேதநூல் திருக்குறள் ஆகும்.

