‘பைக்கர்’ திரைப்படம் ஏப்.3ல் வெளியீடு

நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”.  இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். யு.வி. கிரியேஷன்  தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வினில் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது.., “இந்த மேடையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன் பேசுவது எனக்கு பெருமையாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன. அதனால்தான் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.******

அடுத்த முறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஷர்வானந்த் சார், ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர். இந்தப் படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று. ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள்.