மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நிகழ்வில் சந்தோஷ் பிரதாப் பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த மலர் மேமுக்கு நன்றி. நாங்கள் எல்லோரும் இந்த படத்தின் கிரீடம் என்றால் அதன் மேல் உள்ள வைரம் இசையமைப்பாளர் இமான் சார் தான். சமூகத்தில் பெண்கள் பலதுறைகளில் முன்னேறி விட்டார்கள். என்றுமே அவர்களுக்குதான் முதலிடம். எப்போதும் பல தடைகள் இருந்தாலும் அதை எல்லாம் எதிர்க்கவும் தாண்டி வரவும் கற்று விட்டோம். அதனால் மலர்விழி மேடம் பெரிய இடத்திற்கு செல்வார். படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவும் நிச்சயம் தேவை”.*******
இயக்குநர் மலர்விழி நடேசன், “இது என்னுடைய இரண்டாவது படம். நான் ரசித்த படங்களின் இயக்குநர்களான உதயகுமார் சார், பேரரசு சார் என இங்கு வந்திருக்கும் பலரின் படங்களுக்கு நான் ரசிகை. அவர்கள் என் படத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வாழ்த்த வந்திருப்பது கனவு நனவான தருணம். தனஞ்செயன் சாருக்கு படம் பிடித்திருப்பது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தது. படத்திற்கு இசை மிக முக்கியம் என்பது என் எண்ணம். இந்தப் படத்திற்கு இமான் சாரின் இசை மிகப்பெரிய பலம். இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதற்கு மிகப்பெரிய பங்களிப்பு இமான் சாருக்கு உள்ளது. அவருக்கு நன்றி. சந்தோஷ், புஜிதா, பவ்யா மற்றும் என்னுடைய தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் உங்கள் அனைவரது ஆதரவும் இந்தப் படத்திற்கு தேவை”.
இசையமைப்பாளர் டி. இமான், “இந்தப் படத்தின் கதை என்பதை தாண்டி பெண் இயக்குனருடன் எனது பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த படத்திற்கு இசையமைத்தேன். கல்வியாளர் இயக்குநராக சினிமாவுக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். சந்தோஷ பிரதாப் நிச்சயம் பெரிய இடத்திற்கு செல்வார். ஹீரோயின்ஸ் அழகாக நடித்திருக்கிறார்கள். படத்திற்கு சப்போர்ட் செய்ய வந்துள்ள விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”

