சென்னை,நவ.6- தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப.,உத்தரவின்படி, மாநிலம் தழுவிய ‘ஒரு நாள் ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,760 கிலோ கஞ்சா மற்றும் 0.250 கிராம் மெத்தம் பெட்டமைன் ஆகியவை செங்கல்பட்டு மாவட்டம், தென் மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கழிவு சுத்திகரிப்பு மற்றும் அழிப்பு நிலையத்தில் அழிக்கப்பட்டன. நடப்பு 2026 ஆம் ஆண்டில், 868 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7,781.66 கிலோ கஞ்சா, 140.253 கிலோ பிற போதைப் பொருட்கள் மற்றும் 1,440 போதை மாத்திரைகள் அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல்துறை தலைவர் மற்றும் தலைவர், சென்னை சி.ஐ.டி.காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில், வெளிப்படைத் தன்மை மற்றும் சட்ட நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நம்பிக்கையான தகவல்களைப் பொதுமக்கள்உதவி எண் (Helpline): 10581, வாட்ஸ்அப் (WhatsApp): 9498410581, மின்னஞ்சல் (E-mail): spnibcid@gmail.com, மொபைல் செயலி (App): TN Drug Free அல்லது அருகிலுள்ளகாவல் நிலையம் மூலம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*****

