(தங்க முகையதீன்)
நடிகை ஆண்ட்ரியா தயாரிப்பில் விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா ஜெரமையா, ருஹாணி ஷர்மா, சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், மகாலட்சுமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மாஸ்க்”. சட்டமன்ற தேர்தல் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுக்க பல நூறு கோடி ரூபாய்களை பல்பொருள் அங்காடிக் கடை நடத்தும் ஆண்ட்ரியா மூலம் பணத்தை பட்டுவாடா செய்ய பணம் அனுப்பபடுகிறது. அந்த பணத்தை ஆண்ட்ரியா தனது கடையில் மறைத்து வைத்திருக்கிறார். இதை தெரிந்து கொண்ட சில முகமூடி மனிதர்கள் அந்தப் பணம் முழுவதையும் கொள்ளையடித்து சென்று விடுகிறார்கள். கொள்ளைபோன அந்த பணத்தை மீட்டுத்தர பணத்துக்காக தரகு வேலைபார்க்கும் கவினுடன், ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்து கொள்கிறார். கொள்ளையடித்த அந்த முகமூடி மனிதர்கள் யார்? ஒப்பந்தபடி கவின் அந்தப்பணத்தை மீட்டு ஆண்ட்ரியாவிடம் ஒப்படைத்தாரா?. அரசியல்வாதிக்கு அந்த பணம் எங்கிருந்து கிடைத்தது? என்பதுதான் கதை. பெயரளவுக்கு அங்காடி கடை நடத்திக் கொண்டு பின்புலத்தில் பல குற்றச் செயல்களை செய்துவரும் ஆண்ட்ரியா அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக நடித்திருக்கிறார். கவினின் முந்தைய படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் இப்படம் அவருக்கு கைகொடுக்கும் என்று நம்பலாம். ஒரு படம் வெற்றிபெற கதைதான் நாயகனே தவிர கதாநாயகனல்ல என்பதை ஏற்றுக் கொண்டு கவின் இப்படத்தில் நடித்துள்ளார். காரணம் உச்சநட்சத்திர நடிகர்கள் ஏற்றுக் கொள்ளாத ஒரு கதாபாத்திரத்தை கவின் ஏற்று நடித்துள்ளார். ஆண்ட்ராவின் நடிப்புத்திறன் இப்படத்தில்மேலோங்குள்ளது. சார்லியின் கதாபாத்திரம் மெச்சத்தகுந்தது. உச்சக்கட்ட காட்சியில் அவர் வரும் காட்சிகளில் நடுத்தர மக்களின் மனங்களில் குடியேறுகிறார். தனது நடிப்பிற்கு மெருகேற்றியிருக்கிறார். ஜி.வி.பிரகாசின் இசை தாளம்போடவைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் கடின உழைப்பு தையில் தெரிகிறது. படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் திரைக்கதை சலிப்புத்தட்டாமல் கொண்டு சென்றுள்ளார். மோசடி பேர்வழிகளால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களின் மனநிலையில் இருந்து படத்தியக்கிய இயக்குநர் விகர்ண்ணன் அசோக் பாராட்டுதலுக்குறியவர்.

