சென்னை பெருநகர காவலில் வழக்குகளில் துப்புதுலக்க, கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டறிதல், போதைப்பொருட்கள் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேற குற்றசம்பவங்களில் காவல் துறையினருக்கு எளிதில் எதிரிகளைகைது செய்து நடவடிக்கை எடுக்க பெரிதும் உதவியாய்மோப்ப நாய் படை பிரிவு இருந்து வருகிறது. மோப்பநாய்களுக்கு திறமையாக செயல்படுவதற்கு பயிற்சிபெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள், ஆளிநர்கள்தொடர்சியான பிரத்யேக பயிற்சிகள் மற்றும் மருத்துவஉதவிகள் வழங்கி மோப்பநாய்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
கடந்த 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகிய 2 நாட்கள்மயிலாப்பூர் St.Bedes School மைதானத்தில், The Madras Canine Club நடத்திய வளர்ப்பு நாய்களுக்கானகண்காட்சியில் நாய்களுக்கான கீழ்படிதல் (Obedience Trials) மற்றும் திறமைகள் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் மோப்ப நாய்படை பிரிவைச்சேர்ந்த மோப்ப நாய்கள் Snoppy, Charles, Arjun, Tamarai கொண்ட அணி உட்பட பல்வேறுமாநிலங்களிலிருந்து சில அணிகளும் கலந்து கொண்டன.
18.01.2025 அன்று நடத்தப்பட்ட கண்காட்சி போட்டியில்சென்னை பெருநகர காவல் மோப்பநாய் படைபிரிவைச்சேர்ந்த அணி கீழ்படிதல் பிரிவுகளில் 5 பரிசுகளைபெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமைசேர்த்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், இ.கா.ப., (20.01.2025) மேற்படி கண்காட்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மோப்பநாய்கள், மற்றும் மோப்ப நாய்களை கையாண்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களான உதவி ஆய்வாளர்கள் G.கோமேதகவேலு, M.நாராயணமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரம், தலைமைக் காவலர்கள்திரு.முருகன் (HC 25437), செந்தில் ((HC 36675)), முதல் நிலை காவலர்கள் பிரபாகரன் (Gr.I.46305), ஷாம்குமார் ஆகியோரை பாராட்டியும், மோப்ப நாய்களை வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்தும் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையாளர்.S.சக்திகணேசன், இ.கா.ப உடனிருந்தார்.