தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் “மதகஜராஜா” திரைப்படம் வெற்றிக்கு பாராட்டை தெரிவித்தது

சுந்தர் சி இயக்கத்தில், விஷால், சந்தானம் வரலட்சுமி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த மதகஜராஜா” திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை பாராட்டியும், சமீபத்தில்  உடல்நிலை குறித்த வதந்திகளை பொய்யாக்கிய நடிகர் விஷாலை தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சங்கத்தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம், பொருளாளர் ஒற்றன் துறை ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்******

மேலும், 19 வருட தன் திரைப் பயணத்தில்,  தன் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து, இக்கட்டான கால கட்டங்களில் கூடவே  நின்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தும், பல கோடி மக்கள் தன் உடல் நிலை குறித்து வேண்டுதல்கள் பிரார்த்தனைகள் செய்தவர்களுக்கும், தன் ரசிகர்களுக்கும் எப்போதும் தான் மறக்க முடியாத அளவு பெரும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.. விஷால் ஆரோக்கியமும், அடுத்தடுத்த வெற்றிகளும் பெற தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என சங்க்கத்தின் சார்பில் தெரிவித்தார்கள்.