சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக காவல்துறையினர் பாதுகாப்பான மற்றும் திறமையான சாலை பயன்பாட்டை உறுதி செய்வதில் போக்குவரத்து சிக்னல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், இன்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சென்னை பெருநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதிலும், விபத்துகளைக் குறைப்பதிலும் 300-க்கும் மேற்பட்ட சாலை சந்திப்புகளில் இயங்கி வரும் போக்குவரத்து சிக்னல்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. போக்குவரத்து சிக்னல்களை மீறுதல் ஒரு குற்றமாகும், இது உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துகிறது.
போக்குவரத்து சிக்னல்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் மற்றும்
பொறுப்பான சாலை நடத்தையை ஊக்குவித்தல் குறித்து சாலை பயனர்களுக்கு,
குறிப்பாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
பிரச்சாரங்களை காவல்துறை அதிகாரிகள் தலைமையில் சென்னை பெருநகர
போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக,
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சிக்னல்களின்
உள்கட்டமைப்பை விரிவுப்படுத்தி மேலும் சீரான போக்குவரத்திற்கு உதவும்
வகையில் முக்கிய சந்திப்புகளில் நவீன தொழில் நுட்பட உதவிகளுடன் உரிய
தகவல்களுடன் போக்குவரத்தை கட்டுப்பாட்டுடன் இயக்கும் நவீன சிக்னல்களின்
அமைப்பை அறிமுகப்படுத்துவதிலும் முன்னிலை வகிக்கிறது. அனைத்து வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் போக்குவரத்து சிக்னல்களை கண்டிப்பாகப் பின்பற்றி, பாதுகாப்பான, விபத்து இல்லாத சென்னை பெருநகராக மாற்றிட சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆகஸ்ட்-5 சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
