சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் ராமலிங்கம், 2011 ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம், சென்னை அம்பத்தூர், மத்தியகுற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை பிரிவுகளில் பணிபுரிந்து 2025ம் ஆண்டு காவல் ஆய்வாளராக பதவி உயர் பெற்றார். காவல் ஆய்வாளர் துறை அனுமதியுடன் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வில் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வு பெற்று பணிநியமன ஆணை பெற்றுள்ளார். (04.09.2025) காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து கொண்டு, தொடர்ச்சியாக ஊக்கத்துடன் பல்வேறு உயர் பதவிகளுக்கான அரசு தேர்வுகளில் பலமுறை கலந்து கொண்டு, தேர்ச்சி பெற்றும் இறுதியாக காவல் துறையில் துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணை பெற்று, 07.09.2025 முதல் பணிப்பயிற்சிக்கு அறிக்கை செய்ய உள்ள காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி உடனிருந்தார்.
சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
