சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக் குழு செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட்லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட வசதியில், அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, சென்னை பெருநகர காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் அறிவியல் பூர்வமாக எரித்து அழிக்கப்பட்டது. சென்னை முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களால் 197 போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 1,023 கிலோகிராம் எடை கொண்ட கஞ்சா அழிக்கப்பட்டது போதைப்பொருள் ஒழிப்பு குழுவின் உறுப்பினர் மற்றும் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, இ.கா.ப., அவர்கள் தலைமையில், துணை ஆணையாளர் (நுண்ணறிவுப்பிரிவு-1) ஆர்.சக்திவேல், மற்றும் தடய அறிவியல்
துறையின, பகுப்பாய்வு அதிகாரி கே.எ.ரமேஷ், ஆகியோர் கொண்ட
குழுவினரால் போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டது. இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கும், போதைப்பொருட்கள், கடத்தல்காரர்கள் மற்றும் வலையமைப்புகளுக்கு எதிராக சென்னை பெருநகர காவல்துறை தொடர்ந்து உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.
காவல் நிலைய 19 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1.023 கிலோ போதைப் பொருட்கள் சென்னை பெருநகர காவல்துறையால் அழிக்கப்பட்டது.
