பா.ஜ.கட்சியில் ஒருவர் கொல்லப்பட்டால் முஸ்லீம்கள் மீது பழிபோடுவதா? – இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம்

பா.ஜ.கட்சியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் முஸ்லீம்கள் மீது பழி போடுவதற்கு இந்திய வழக்கறிஞரகள் சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் தேசிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பாலச்சந்தர் என்ற பாஜக மாவட்ட பட்டியலின பிரிவு தலைவர் பாலச்சந்தர் கொல்லப்பட்டுள்ளார். அதை மத ரீதியாக முடிச்சுப் போட்டு பேசி வரவருகிறார்கள் பாஜகவினர். பாலச்சந்தர் ரியல் எஸ்டேட், வசூல், கட்டப்பஞ்சாயத்து என குற்றப் பின்னணி கொண்டவர். இந்து முன்னணியில் செயல்பட்டு வந்துள்ள இவர் ஒரு முறை மாட்டின் தலையை வெட்டி இந்து முன்னணி அலுவலகத்தில் வைத்து விட்டு முஸ்லீம்கள் மீது பழியைப் போட முயன்று காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளானவர் என்கிறார்கள். சிறையிலும் இருந்துள்ளார். இவர் பெயர் ரௌடிகள் பட்டியலிலும் இருந்துள்ளது. ராமகோபாலன் மறைவுக்குப் பின்னர் இந்து முன்னணியில் செயலில் இல்லாத பாலச்சந்தர் தனக்கு பாதுகாப்பு தொழில் முறையாக நடக்க அரசியல் கட்சி ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழலில்தான் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார். அங்கு இணைந்த பின்னர் அவரது பெயர் ரௌடிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பும் கொடுத்துள்ளார்கள். உள்ளூர் அளவில் இவரால் பாதிக்கப்பட்ட ரௌடிகள் பலர், இவரை கொன்று விட்டார்கள் என்கிறார்கள். கொல்லப்பட்டுள்ள பாலச்சந்தரின் சகோதரி அளித்த பேட்டியில் அசோக், ஆனந்த், பிரதீப், சஞ்சய், பிரேமா, ப்ரியங்கா, சாந்தி இவர்கள்தான் தம்பியை கொன்று விட்டார்கள் எனக் கதறுகிறார்கள். ஆனால் எச்.ராஜாவோ மத ரீதியான சந்தேகம் வரும் படி எழுதுகிறார். பாஜகவின் தொடர்புடைய பல கொலைகள் ரியல் எஸ்டேட், வசூல் ரௌடி மோதலால் நடப்பவைதான். இதற்கு மற்ற கட்சிகள் விதி விலக்கு அல்ல, ஆனால் மற்ற கட்சியினர் கொல்லப்படும் போது அது கொலையாக முடிந்து விடுகிறது. பாஜகவினர் கொல்லப்பட்டால் முஸ்லீம்கள் மீது பழி போடப்படுகிறது. கிறிஸ்தவரான காவலர் செல்வராஜ் கொலையை இந்து- முஸ்லீம் கலவரமாக மாற்றியவர்கள். இந்த கொலையயும் முஸ்லீம் மக்கள் மீது மதரீதியான கொலையாக மாற்ற முயல்வதை இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என அச்சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் தேசிங் தெரிவித்துள்ளார்.