அன்றும் இன்றும் இளைஞர்களுடன் பணியாற்றுகிறேன் – கமல்ஹாசன்

இப்படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் என்னுடைய ரசிகர்கள். படப்பிடிப்பின் போது என்னை பாராட்டிக்கொண்டே இருந்தார்கள். அது வித்தியாசமாக இருந்தது.  விக்ரம் படம் அதிக விலைக்கு  விற்றிருக்கிறது. விழாவில் விக்ரம் பட பி ஆர் ஒ டைமண்ட் பாபு 600வது படத்தை நிறைவு செய்வதால்  அவருக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார்.*******

விக்ரம் பட டைட்டிலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் கேட்டு வைத்தார். அன்று விக்ரம் படத்தை ராஜசேகர் இயக்கினார். அவர் கே எஸ்.ரவிகுமார்போல் கமர்ஷியல் டைரக்டர். தற்போது. விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதை இரண்டாம் பாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். விக்ரம் 3 ம் பாகத் தையும்  லோகேஷ் கனகராஜ் இயக்குவார். இப்படத்தில் பணியாற்றிய இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட அனைவரும்  கடுமையான உழைப்பை தந்திருக்ககிறார்கள்.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.