19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இ.பி.காலனி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் கன்னிவாடி தெத்துப்பட்டி பகுதியைச்சேர்ந்த வைரவன் (வயது 31), முத்துக்கருப்பன் (வயது 23), சுந்தரபாண்டி (வயது 38), கன்னிவாடி தெத்துப்பட்டி நவீனா (வயது 25), அர்ஜுனன் (வயது 48), ஷேக் பரீத் (வயது 33), திவ்யா (வயது 31), ஷேக் முகமது ரஃபிக் (வயது 35), ஜலாபாகலோகேஸ்வரா பிரசாத் (வயது 30) ஆகிய 9 நபர்களை தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு மதுரை முதலாம் கூடுதல்சிறப்பு போதை பொருட்கள் மனமயக்கும் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் தாலுகா சரக காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கமலதாஸ் தலைமை காவலர் சதீஷ்குமார் மற்றும் அரசு வழக்கறிஞர் விஜய பாண்டியன் சீரிய முயற்சியால் 19.05.2025 ஆன்று மதுரை போதைப் பொருட்கள் மனமயக்கம் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற் நீதிபதி, குற்றவாளிகள் வைரவன், முத்துக்கருப்பன், சுந்தரபாண்டி, நவீனா, அர்ஜுனன் ஜலாபாக லோகேஸ்வரா பிரசாத் என்பவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,00,000/- அபராதமும. மேலும் சேக் பரீத், திவ்யா, சேக் முகமது ரஃபிக் என்பவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல் கஞ்சா வழக்கில் 6 நபர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை
