நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை”. ஜனவரி 13 – ஒரு பாடல் ஆடியோ வெளியீடு.

வெற்றி நாயகன் அருண் விஜய், வெற்றி இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் விரைந்து முடிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது . பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி  யானை பட ரசிகர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஜனவரி 13 காலை பாடல் அறிவிப்பு குறித்தான போஸ்டரை வெளியிடுகின்றனர். மாலை 5மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகிறது. இப்படத்திற்காக இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.  நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன் அட்டகாசமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. அருண்விஜய், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசை:G.V.பிரகாஷ்குமார்,
ஒளிப்பதிவு:கோபிநாத்,
எடிட்டிங்:அந்தோணி,
ஆர்ட்:மைக்கேல்,
ஸ்டண்ட்:அனல் அரசு,
நடனம்:பாபா பாஸ்கர்,தினா,
CEO:G.அருண்குமார்,
இணை தயாரிப்பு:சந்தியா கிஷோர்குமார்.
நிறுவனம்:டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பு:வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் இசை டிரெய்லர் வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.