51 பசுக்களுடன் கோபூஜை, பெண்களுடன் சமத்துவ பொங்கல்; களைகட்டிய கலப்பை மக்கள் இயக்கத்தின் பொங்கல் விழா

கன்னியாகுமரி;புன்னார் குளம் பகுதியில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆறாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் 501 பெண்களுக்கு பொங்கல் பானையும் அதற்கான பொருட்களும் வழங்கப்பட்டது மேலும் பசுக்களுக்கு மாலை அணிவித்து கோ பூஜையும் மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது ஏழைகளுக்கு இலவச சேலையும் வழங்கி கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பிடி செல்வகுமார் பேசுகையில்” கலப்பை மக்கள் இயக்கம் கடந்த 6 ஆண்டுகளாக மிக சிறப்பான முறையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறது .

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கோவிட் பெருந்தொற்று இருப்பதால் இந்த பொங்கல் விழாவை புன்னார் குளம் பகுதியில் இயற்கை எழில் நிறைந்த மரங்கள் நிறைந்த தோப்பில் எளிமையாக கொண்டாடி வருகிறோம். சமத்துவ பொங்க லாக அனைத்து மதங்களும் ஒருங்கிணைந்து கொண்டாடி வருகிறோம் வருங்காலத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக கோபூஜை நடத்தியும் மாட்டுப்பொங்கல் நடத்தியும் அன்பை வலியுறுத்தி வருகிறோம் .

எல்லா மக்களும் இந்த பொங்கல் முதல் உடல் ஆரோக்கியம் நிம்மதி சந்தோஷம் என எல்லா வளங்களையும் பெற்று வாழ கலப்பை மக்கள் இயக்கம் வாழ்த்துகிறது.” என கூறினார் விழாவில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி ரங்கநாயகி, புன்னார் குளம் ஜமாத் தலைவர் சாதிக், காணிமடம் ஸ்ரீ பொன் காமராஜ் ஸ்வாமிகள், குருசுமலை பங்கு தந்தை பீட்டர் பாஸ்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்