அஜ்மல் ஹான், ரேயோ ஹரி ஆகியோரின் தயாரிப்பில் லோகேஷ் அஜ்லிஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, அமிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜெய் ஆகியோரின் நடிப்பில் வெளிவரும் படம் “லெவன்”. முகமூடியணிந்த மர்ம கொலையாளி ஒருவன், சில நபர்களை கொலை செய்து அரைகுறையாக எரித்து போடுகிறான். இப்படி 11 நபர்களை கொலை செய்கிறான். அவனை கைது செய்ய முடியாமல் காவல்த்துறை திணறுகிறது. அந்த கொலையாளி யார்? எதற்காக 11 நபர்களை கொலை செய்கிறான் என்பதுதான் படத்தின் கதை. கொலையாளியை கண்டுபிக்க நியமிக்கப்பட்டிருக்கும் காவல்த்துறை துணை கண்காணிப்பாளர் நவீன் சந்திராதான் படத்தின் நாயகன். ஆரம்பம் முதல் இறுதிவரை இறுக்கமான முகத்துடனே நடித்திருக்கிறார். கொலையாளியை நெருங்கும்போதெல்லாம் வேறு ஒரு இடத்தில் கொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது. இதனால் விரக்த்தியின் ரேகைகளை தன் முகத்தில் தெளிவாக படரவிட்டு நடித்திருக்கும் நவீன் பாராட்டுதலுக்குரியவர். ஆதரவற்ற குழந்தைகளுக்கென இலவச பாடசாலை நடத்திவரும் அபிராமியின் முகத்தில், ஒரு தாயுள்ளத்தை காணமுடிகிறது. சிறப்பான நடிப்பை தந்துள்ளார். திரைக்கதையின் ஒவ்வொரு காட்சியமைபும் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் படத்தை திறைமையாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குநர் லோகேஷ் அஜ்லிஸ். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் மிரமிக்க வைக்கிறது. உச்சக்கட்ட காட்சி நிறவடையும்போது படம் பார்ப்பவர்களின் கண்கள் ஈரமாகிறது. துப்பறியும் ஒரு நாவல் புத்தகத்தை திரைப்படமாக்கி தந்துள்ளார் இயக்குநர் லோகேஷ் அஜ்லிஸ். வாழ்த்துக்கள் இயக்குநரே. இருட்டையும் ரசிக்கும்படி படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகன். ஶ்ரீகாந்தின் படத்தொகுப்பு பாராட்டும்படியுள்ளது. இரவின் ஓசையையும் உதிர்ந்த இலைச் சறுகின் மெல்லிய சப்தத்தையும் வித்தியாசமான ஒலியாக்கி சாதனை படைத்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.
“லெவன்” திரைப்பட விமர்சனம்
