பழமையை போற்றும் படம் ‘கட்டில்’

.வி.கணேஷ் பாபு தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து இயக்கியியுமிருக்கும் படம்கட்டில்“. 1773 ஆம்ஆண்டில் வாழ்ந்த ஜமீன் குடும்பத்தில் செய்யப்பட்ட வேலைப்பாடு மிகுந்த கட்டிலை, வாழையடி வாழையாகநான்காவது தலைமுறை வாரிசான (2023ஆம் ஆண்டு) விதார்த் பழமையைப் பற்றி பேசுவதாக திரைக்கதைஅமைக்கப்பட்டுள்ளது. .வி.கணேஷ் மூன்று தலைமுறை கதாநாயகனாக நடித்து இயக்கியிருப்பது நம்மைவியக்க வைக்கிறது. காலத்திற்கேற்ற வேடத்திற்கு அப்படியே பொருத்தமாக இருக்கிறார். மூன்றாவதுதலைமுறை கணேஷ்பாபுவுக்கு மனைவியக நடித்திருக்கும் சுருஸ்டி டாங்கே கர்ப்பவதி வேடத்திற்க்கும்,  மாமியாருக்கு மரியாதை கொடுப்பதிலும் பெண்மைக்கு அஸ்திவாரம் போட்டு நடித்திருக்கிறார். கொஞ்சமும்விரசம் இல்லாத பழங்காலத்து படத்தை பார்க்கும் அனுபவம் அனைவருக்கும் கிடைக்கும். படம் ஆரம்பம் முதல்முடிவு வரை சலிப்பு தட்டாமல் ரசிக்கும்படி அழகாக இயக்கியிருக்கிறார் .வி.கணேஷ் பாபு.