பாலிவுட்டில் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப்

தென் இந்திய சினிமாவில் தனது தனித்துவமான இசையால் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் பாலிவுட் திரையுலகில் கால் பதித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் “தோ திவானே ஷெகர் மெய்ன்” திரைப்படத்தின் மூலம், ஹேஷாம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இது தென் இந்திய திரைப்பட உலகுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. இசைக்காக அறியப்படும் ஒரு படைப்பாளி, பல மொழித் திரையுலகுகளை வெற்றிகரமாக கடந்து, இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான பாலிவுட்டில் அறிமுகமாகுவது குறிப்பிடத்தக்கது.*******

“தோ திவானே ஷெகர் மெய்ன்” Do Deewane Sheher Mein படத்தை  ரவி உத்யாவர் Ravi Udyawar இயக்கியுள்ளார். பாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஜோடி சச்சின் – ஜிகர் (Sachin–Jigar ) உடன் இணைந்து இப்படத்தில் ஒரு பாடலுக்கு  ஹேஷம்  இசையமைத்துள்ளார். ஹேஷம்  இசையமைத்த பாடலை ஜூபின் நௌடியல் Jubin Nautiyal மற்றும் நீதி மோகன் Neeti Mohan பாடியுள்ளனர்; பாடல் வரிகளை அபிருச்சி Abhiruchi எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப், மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல வெற்றிப்படங்களைத் தந்தவர்.  குறிப்பாக தெலுங்கு சினிமாவில், குஷி, ஹாய் நானா வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான கேர்ள்ஃபிரண்ட் திரைப்படத்தின் தனித்துவமான இசை  அவருக்கு மகுடம் சூட்டியது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் Million Dollar Studios தயாரித்த ஒன்ஸ் மோர்  திரைப்படமும் , சூரி நடித்த மாமன் படமும் தமிழ் திரையுலகில் அவருக்கு பெரும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது.