நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் நடிக்கும் படம் “உருட்டு உருட்டு”

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “உருட்டு உருட்டு”. இப்படத்தில் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்ஹின் அறிமுக நிகழ்வில் நாயகன் கஜேஷ் நாகேஷ் பேசியதாவது:  “இபடத்திற்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் கொஞ்சம் கஷ்டத்தில் தான் ஆரம்பித்தோம், தயாரிப்பாளர் ஜெய் அண்ணா இந்தப்படத்தை நன்றாக செய்வோம் என உழைத்துள்ளார். இசையமைப்பாளர் அருமையான இசையை தந்துள்ளார். தினா மாஸ்டர் அருமையான நடன அமைப்பை அமைத்துள்ளார். இயக்குநர் அழகாக இயக்கியுள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும், இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.*****

நடிகர் ஆனந்த்பாபு பேசியதாவது: என் மகனின் படத்திற்கு வாழ்த்த வந்துள்ள  திரையுலக பெரியவர்களான  விக்ரமன் சார், கஸ்தூரி ராஜா சார், ஆர்வி உதயகுமார் சார், அனைவருக்கும் நன்றி. இவர்களுடைய ஆசிர்வாதம் என் பிள்ளைக்கு கிடைப்பது மகிழ்ச்சி. இது எங்க அப்பா செஞ்ச புண்ணியம், நாகேஷ் ஐயாவுக்கான மரியாதையாக இது அமைந்துள்ளது.  உருட்டு உருட்டு படத்தை இயக்குநர்  அழகாக செய்துள்ளார். என்னுடைய பையன் நாயகனாக நடித்துள்ளான். நான் நடித்த போது எனக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ, அதே போல் என் பையனுக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

தொழில் நுட்ப குழு விபரம்  ஒளிப்பதிவு – யுவராஜ் பால்ராஜ்  பாடல் இசை – அருணகிரி பின்னணி இசை –  கார்த்திக் கிருஷ்ணன் பாடல்கள் –  பெப்சி தாஸ், பாஸ்கர் எடிட்டிங் – திருச்செல்வம். நடனம்  – தினா விளம்பர வடிவமைப்பு – விஜய் கா. ஈஸ்வரன்  மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் தயாரிப்பு – பத்ம ராஜு ஜெய்சங்கர். கதை திரைக்கதை வசனம் எழுதி  இயக்கியுள்ளார் பாஸ்கர் சதாசிவம்.