குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம்

ஸ்காபுறோவில் அமைந்துள்ள The Estate Banquet & Event Centre  நிறுவனத்தின் பங்காளரும் கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தற்போதைய தலைவருமான நண்பர் குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம் The Estate Banquet & Event Centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள்- வர்த்தகப் பெருமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து ராஜா அவர்களை வாழ்த்திச் சென்றனர்.