ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களுடனும் தமிழர் அமைப்புக்களுடனும் இறுக்கமான தொடர்புகளைப் பேணிய வண்ணம் தனது அரசியல் மற்றும் சமூகப் பணிகளை ஆற்றிவரும் ஒன்றாரியோ பாராளுமன்றத்தில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் Aris Babikian அவர்களால் ஏற்பாடு செய்யப்பெற்ற 3வது ஆண்டு ‘ஆர்மேனியன் மரபுரிமை மாதக் கொண்டாட்டம். கடந்த 26-05-2025 அன்று திங்கட்கிழமை ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான ‘குயின்ஸ்பார்க்’ வளாகத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் ஆர்மேனிய தேசத்தினதும் மக்களினதும் பண்பாட்டுக் கோலங்கள் நடனங்களாகவும் இசையாகவும் பார்வையாளர்களுக்கு சமர்ப்பிக்கப்பெற்றன. ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் மற்றும் அமைச்சர்கள் அத்துடன் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் நண்பர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் Aris Babikian அவர்களால் ஏற்பாடு செய்யப்பெற்ற 3வது ஆண்டு ‘ஆர்மேனியன் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்.
