மாறன் திரை விமர்சனம்

பரபரப்பு செய்திகளைவிட உண்மையான செய்திகளுக்கு மதிப்பும் அதிகம் அதேபோல் ஆபத்தும் அதிகம்என்பதை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான்மாறன்“. நிருபராக வேலை பார்க்கும் தனுஷின்தந்தை ராம்கி உண்மையான செய்திகளை வெளியிட்டதால் விபத்தின் மூலம் அவரை கொலை செய்துவிடுகிறார்கள். அதே விபத்தில் கர்ப்பமாக இருக்கும் தனுஷின் அம்மாவும் மருத்துவமனையில் பெண்குழந்தை பெற்றதும் இறந்து விடுகிறார். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த தனுஷ்வும் அவரதுதங்கையும் ஆடுகளம் நரேன் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்கள். தனுஷ் பெரியவனாக வளர்ந்ததும்நிருபராக பணியாற்றுகிறார். இடைத்தேர்தலில் வாக்களிக்கும் கணனி எந்தரத்தில் தில்லுமுல்லுநடக்கிறது. இந்த உண்மை சம்பவத்தை செய்தியாக வெளியிடுகிறார் தனுஷ். இதனால் பாதிப்படைந்தமுன்னாள் அமைச்சர் சமுத்திரகனி தனுஷை பலிவாங்க திட்டமிடுகிறார். இந்த நிலையில் தனுஷின்தங்கையை எரித்து கொன்றுவிடுவதைப் போல் காட்சியமைக்கப் படுகிறது. தங்கை கொலைசெய்யப்பட்டாளா அல்லது இல்லையா கொலை செய்யப்பட்டால் யார் கொலை செய்தது ஏன் எதற்காகஎன்பதை கதையில் சொல்லப்பட்டிருக்கும் விதம் சற்று வித்தியாசமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.  திரையரங்குகளில் வெளியாகும் தனுஷின் படம் போல் விறுவிறுப்பாக இல்லை. இணைய தளத்தில்வெளியிடப்படும் படமென்பதாலையோ என்னவோ தனுஷின் நடிப்பில் தொய்வு தெரிகிறது. காட்சியமைப்பும் கோர்வையாக இல்லை. குண்டும் குழியும் நிறைந்த பாதையில் பயணிப்பதைப் போல் கதை பயணிக்கிறது. தனுஷ் சமுத்திரக்கனி அமீர் போன்ற வல்லமை நிறைந்தநடிகர்களின் நடிப்பு பக்கபலமாக இருக்கிறது. மாறனை மாற்றாந்தாய் பிள்ளையாக வளர்த்திருக்கிறார்இயக்குநர் கார்த்திக் நரேன்.