சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் இன்று19.07.2023 கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், திரு. மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர்மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் இ.ஆ.ப., அவர்கள், பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாகப்பிரிவு, கணக்குப்பிரிவு, விற்பனைப் பிரிவு, திட்டமிடுதல் பிரிவு,கொள்முதல் பிரிவு, விழிப்புக்குழுப் பிரிவு, பொறியியல் பிரிவு,கட்டுமானப்பிரிவு, தர உறுதி, அம்பத்தூர் பால் பண்ணைமற்றும் பால் உப பொருட்கள் பண்ணை, மாதவரம் பால்பண்ணை, சோழிங்கநல்லூர் பால் பண்ணை, மற்றும் இதரபிரிவுகளை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், அவர்கள் தலைமையில் இன்று 19.07.2023 கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
