மூன் பிக்சர்ஸ், ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் “தர்மயுத்தம்” இத்திரைப்படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அனு சித்தாரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன் , சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செழியன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என வளர்ந்துள்ள இத்திரைப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார். தென்காசி,குற்றாலம், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகர்ப் புறங்களிலும் உருவாகியிருக்கும் இத் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.******
சீமான் நடிக்கும் புதிய திரைப்படம் “தர்ம யுத்தம்”
