சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது: தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி

சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கூறினார். முதலமைச்சரின் சுகாதார காப்பீட்டு அட்டை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக மாநில அரசை அவர் பாராட்டினார். ‘ஆயுஷ்மான் சங்கம்’ நிகழ்வில் ஊடகங்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். பயனாளிகளுக்கு அதிகாரமளிப்பதே கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய விவாதம் என்று டாக்டர் சர்மா கூறினார். பயனாளி குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படும், இதனால் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது அதிகாரம் பெறுவார்கள். இது தவிர ஐசிடி மற்றும் ஐசிஎச்ஐ ஆகிய இரண்டு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

2022 ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் இரண்டு நாள் தென் மண்டல ஆய்வுக் கூட்டத்தை தேசிய சுகாதார ஆணையம் ஏற்பாடு செய்துள்ளதுதென் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய பிராந்திய ஆய்வுக் கூட்டத்தின் மூன்றாவது நிகழ்வாகும் இது. அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை இதில் கலந்து கொள்கின்றன. முன்னதாக வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய இதேபோன்ற பிராந்திய ஆய்வு கூட்டத்தை ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் (ஏபி பிம்-ஜெய்) மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ஏபிடிஎம்) ஆகிய இரண்டு முதன்மையான மத்திய திட்டங்களை தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்துகிறது. 

இந்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்துவது தொடர்பான அம்சங்களைப் பற்றி விவாதிக்க பல்வேறு முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்க பிராந்திய ஆய்வு கூட்டங்களை ஆணையம் ஏற்பாடு செய்கிறது. சிறந்த நடைமுறைகள், கடந்தகால கற்றல் மற்றும் திட்டங்களின் கீழ் தொடங்கப்படும் புதிய முயற்சிகள் குறித்து விவாதங்கள் நடத்தப்படுகின்றன. நிகழ்ச்சிக்கு டாக்டர் சர்மா தலைமை தாங்கினார். திட்டங்களின் அமலாக்கத்தின் முன்னேற்றம் குறித்த விளக்கக்காட்சியை ஆணையத்தின் கூடுதல் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் கெடம் மற்றும் துணை தலைமை செயல் அதிகாரி டாக்டர் விபுல் அகர்வால் ஆகியோர் வழங்கினர். 

தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் டாக்டர் உமா பேசுகையில், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் பிரதமரின் ஆரோக்கிய திட்டத்துடன் உடன் இணைக்கப் பட்டதால் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதியை பெற முடியும். இதன் மூலமாக தனியார் மருத்துவமனையில் கூட இலவசமாக சிகிச்சை பெற முடியும் என்றார். ஜி.யு. அகமது, நிதி ஆலோசகர் தேசிய சுகாதார ஆணையம்; டாக்டர். ஜெ ராதாகிருஷ்ணன், முதன்மை  செயலாளர் (சுகாதாரம் & குடும்ப நலம்), தமிழ்நாடு; டாக்டர். பி. செந்தில் குமார் முதன்மை செயலாளர் & சிறப்பு பணி அதிகாரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசு தமிழ்நாடு; திரு அனில் குமார் சிங்கால், முதன்மை. செயலாளர் (சுகாதாரம் & குடும்ப நலம்) ஆந்திரப் பிரதேசம்; திரு எஸ்.ஏ.எம். ரிஸ்வி, முதன்மை செயலாளர் (சுகாதாரம் & குடும்ப நலம்) தெலங்கானா; டாக்டர் ரத்தன் கேல்கர், தலைமை செயல் அதிகாரி, எஸ் எச் ஏ, கேரளா; திரு டி. ரந்தீப், சுகாதார ஆணையர், கர்நாடகா; டாக்டர் தரேஸ் அகமது, திட்ட இயக்குநர் (தேசிய சுகாதார இயக்கம்),  தமிழ்நாடு, திரு அமித் சதிஜா, சுகாதார செயலாளர் லட்சத்தீவுகள், திரு சி உதய குமார், சுகாதார செயலாளர், புதுச்சேரி; திரு ஜே. நிவாஸ், ஆணையர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ஆந்திரப் பிரதேசம்; திரு வினய் சந்த், தலைமை செயல் அதிகாரி, எஸ் எச் ஏ, ஆந்திரப் பிரதேசம்: டாக்டர் எஸ் உமா, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட  இயக்குநர், தமிழ்நாடு மற்றும் திருமதி. வி பூபாலகனி துணை குடியுரிமை ஆணையர், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், மத்திய அரசின் முதன்மையான உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் ஆகும். பிரதமர் திரு நரேந்திர மோடியால் செப்டம்பர் 23, 2018 அன்று இது தொடங்கப்பட்டது. இறுதிப் பயனருக்குத் தரமான மருத்துவச் சேவைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.  07 ஏப்ரல் 2022 தேதியின்படி, 17.94 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 3.3 கோடிக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு 25,800 மருத்துவமனைகள் கொண்ட அகில இந்திய நெட்வொர்க் மூலம் ரூ 38,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.  ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் அதிக பயன்பாடு கொண்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. புதுமையான அரசு, தனியார் கூட்டு முறையை அரசு உருவாக்கியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் என்பது இந்திய அரசின் ஒரு லட்சியத் திட்டமாகும். பரந்த அளவிலான தரவு, தகவல் மற்றும் உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் தடையற்ற ஆன்லைன் தளத்தை உருவாக்கும், வெளிப்படையான, சிறப்பாக செயல்படக்கூடிய, தரநிலைகள் சார்ந்த டிஜிட்டல் அமைப்புகளை முறையாக மேம்படுத்துவதும் அதே நேரத்தில் உடல்நலம் தொடர்பான தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு, ரகசியத்தன்மை மற்றும் தனியுரிமையை உறுதி செய்வதும் இதன் நோக்கங்களாகும்.