சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டுஇந்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டம் சார்பாகசென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைஅருங்காட்சியகத்தில், தமிழக தொல்லியல் சின்னங்கள்என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியை தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறைஇயக்குநர் திரு எஸ். . ராமன் இன்று திறந்து வைத்துப்பார்வையிட்டார். மேலும், தமிழகத்தில் உள்ளஅருங்காட்சியகங்கள் பற்றியும் அங்குகாட்சிப்படுத்தப்பட்டுள்ள  பொருட்கள், அவற்றின்முக்கியத்துவம் பற்றியும் விளக்கமளித்தார். இந்தியதொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் திருகாளிமுத்து அருங்காட்சியகங்கள் குறித்துப் பேசினார். தொல்லியல் கண்காணிப்பாளர் (ஓய்வு) திரு. சத்தியமூர்த்திஅருங்காட்சியகங்களின் வலிமை என்ற தலைப்பில் சிறப்புசொற்பொழிவு நிகழ்த்தினார். விழாவில் இந்திய சுற்றுலாதுறையின் மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தியதொல்லியல் துறையின் கங்காதேவி, மேஷ், வெற்றிசெல்விஆகியோர் கலந்துகொண்டனர்இதேபோல், இந்தியத் தொல்லியல் துறையின் கீழ்செயல்படும் கோவில் ஆய்வுத்திட்டம் (தென்மண்டலம்) சார்பில் இரண்டு நாள் கோவில் கலை மற்றும்கட்டடக்கலைத்துறை சார்ந்த காலச்சார விழிப்புணர்வுபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் நாள் களப்பயணத்தில் (17-08-2022) தஞ்சைபிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்டசோழபுரம்பிரகதீஸ்வரர் கோவில், மாளிகைமேடு அகழாய்வு களம்ஆகிய இடங்களின் முக்கியத்துவம், கட்டடக்கலைஆகியவை குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று  மலையடிப்பட்டி சிவா மற்றும்பெருமாள் குடைவரைக் கோவில், குடுமியான்மலை சிவன்கோவில், சித்தன்னவாசல் பாண்டியர் குடைவரைக்கோவில், குடுமியான்மலை சிவன் கோவில், கொடும்பாளூர் மூவர்கோவில் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇடங்களில் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தொல்லியல் அறிஞர் வேதாச்சலம், உதவிதொல்லியல் கண்காணிப்பாளர்,  குமரன், தொல்லியல்ஆய்வாளர் பிரசன்னா ஆகியோர்  புராதன சின்னங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில்விருதுநகர் இந்து நாடார் செந்திநாடார் தமிழ்துறைத்துறை மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.