தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாரியத் தலைமை அலுவலகமான கோயம்பேடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். வாரிய மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) கணேசன் இ.ஆ.ப., வாரிய செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) திரு. சைலேந்தர், தலைமை பொறியாளர்கள் கண்ணன், சரவணன் உள்ளிட்ட வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா சுதந்திரதினம் கொடியேற்று விழா
