சேதமடைந்த வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் மறு கட்டுமானம் குறித்து அமைச்சர் முத்துசாமி வாரியத் தலைவர் பூச்சி முருகன் ஆலோசனை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் சேதமடைந்த குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்யும் பணிகளுக்கான அறிவிப்பை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டார். வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் மறுகட்டுமானம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் சென்னை, கோயம்பேட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி.எஸ்.முருகன் மற்றும் துறையின் செயலாளர் ஹிதேஷ்குமார் மக்வானா, மேலாண்மை இயக்குனர் திரு.சுன்சோங்கம் ஜடக் சிரு, ஐ.ஏ.எஸ்., வாரிய செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சரவணமூர்த்தி உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.