நயன்தாரா நடித்த 02 திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியாகியது

நடிகை நயன்தாரா நடித்த 02 படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியானது. பிராணவாய்வு எவ்வளவு முக்கியமானது என்பதை இப்படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். பயணப் பேரூந்து ஒன்று நிலச்சரிவில் சிக்கி பூமிக்குள் புதைந்து விடுகிறது. பேருந்துக்குள் நயன்தாராவும் அவரது சுவாசக் கோளாறுள்ள குழந்தை உட்பட 6 பேர் சிக்கிக் கொள்கிறார்கள். பேருந்துக்குள் மூச்சிவிட பிராணவாய்வு கிடைக்காமல் தவிக்கிறார்கள். குழந்தையின் சுவாசத்திற்கு வைத்துள்ள பிராணவாய்வை பெறுவதற்காக. 5பேரும் நயன்தாராவை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து குழந்தையை காப்பாற்றிய நயன்தாரா, பூமிக்குள் புதைந்து கிடக்கும் பேருந்திலிருந்து எப்படி வெளியேருகிறார்கள் என்பதை படம் பார்ப்பவர்களின் மனம் பதைபதைக்க காட்டியுள்ளார் இயக்குநர்  ஜி.எஸ்.விக்னேஷ்