தனது வரவிருக்கும் பியூச்சரிஸ்டிக் ஆக்-ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர் பிரபல நடிகர் விஜய்யை மனதில் கொண்டு எழுதப்பட்டது என்று இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்துள்ளார். கதை எழுதும் போது, விஜய் சாரை மனதில் கத்காநாயகனாக கற்பனையாக கொண்டு எழுதினேன். மூன்றாம் உலகப் போரில் இருந்து நம் இந்தியாவை காப்பாற்றும் ஒரு ரகசிய ஏஜெண்டாக அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தேன். விஜய் சாரின் உடல்வாகு ஆற்றல் மற்றும் சக்திவாய்ந்த திரை இருப்பு ஆகியவை அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய உத்வேகமாக இருந்தன. அதன்படியே அந்த கதாபாத்திரத்தை செதுக்கினேன். நடிகர் விக்னேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மிகுந்த ஆர்வம், அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு மற்றும் கடுமையான முயற்சியுடன், அவர் என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினார் என்று இயக்குனர் கூறுகிறார்.********
படத்தில் மொத்தம் ஒன்பது சண்டைக் காட்சிகள் உள்ளன. மேலும் தொண்ணூற்றி ஐந்து நிமிடங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் மூன்று பாடல்கள் உள்ளன. ரெட் ஃப்ளவர் படத்தை ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மாணிக்கம் தயாரித்துள்ளார், விரைவில் இத்திரைப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.