விபத்தில் சிக்கிய பிரபலங்களின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் – பாசத்துடன் ட்வீட் போட்ட மகள் பரஸ் ரியாஸ்

தனக்கு எப்போதும் அட்வைஸ் செய்யும் தந்தை, இன்று அவரே விபத்தில் காயமடைந்திருப்பதை பார்த்து பாசத்துடன் மகள் ட்வீட் போட்டுள்ளார். அதை அவரின் தந்தையும், சினிமா பிரபலங்களின் பிஆர்ஓ.,வுமான ரியாஸ் லைக் செய்துள்ளார். கோலிவுட்டில் ரஜினி, விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் பிஆர்ஓ.,வாக இருப்பவர் ரியாஸ். இவர் விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்துள்ளார். இந்த விபத்தில் ரியாசிற்கு காலில் காயம் ஏற்பட்டு, கட்டுப் போட்டுள்ளார். இந்த போட்டோக்களை ரியாசின் மகள் பரஸ் ரியாஸ் ட்விரில் பகிர்ந்துள்ளார். அதோடு, சாலையில் வேகமாக வாகனம் ஓட்டக் கூடாது என அப்பா எப்போதும் எனக்கு அட்வைஸ் செய்து கொண்டே இருப்பார். அதனால் நான் மிகவும் கவனமாக இருப்பேன். வேகமாகவும் வாகனத்தை ஓட்ட மாட்டேன். ஆனால் அது இன்று அவருக்கே நடந்துள்ளது. நல்லவேளையாக இன்று மாலை நடந்த விபத்தில் அப்பாவிற்கு ஒன்றும் ஆகவில்லை. லேசான காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்.

தயவு செய்து நீங்கள் ஹெல்மெட் அணியுங்கள். பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுங்கள் எனவும் மற்றவர்களை பரஸ் ரியாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். பரஸ் ரியாசின் இந்த ட்வீட்டை பார்த்து விட்டு, ரியாஸ் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, தொடர்ந்து வாகனத்தை கவனமாக ஓட்டும் படி பரஸ் ரியாசிற்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். பிஆர்ஓ.,க்கள் கர்நாடக ரஜினி ரசிகர்கள் மன்றத்தினர் உள்ளிட்ட பலரும் ரியாஸ் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பரஸ் ரியாசும் நன்றி தெரிவித்து வருகிறார்.