குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு திரையிடல்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டு,விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்பு மற்றும் சிசிடிவிகேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்கள்கடந்த 06.12.2021 அன்று சென்னை பெருநகர காவல்துறைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில்(26.12.2021) W-24 தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்தேனாம்பேட்டை, கிரியப்பா சாலை மற்றும் டாக்டர் தாமஸ் ரோடு பகுதியில் உள்ள ஹவுசிங்போர்டுகுடியிருப்பு பகுதிகளிலும், W-21 கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் செம்மஞ்சேரி ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியிலும்,பல்நோக்கு வாகனம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வுகுறும்படங்கள் காண்பிக்கப்பட்டது. மேலும் போக்சோ சட்டம், குழந்தைத் திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் முறை தடுப்புச் சட்டம், கல்வி உரிமைச்சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும், அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி மைய எண்கள் 1098, 14417, 100, 1091, 181 மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது.