தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

தமிழகத்தை கொரோனா பிடியிலிருந்து காப்பாற்றிட இரவுபகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு தலைமையில் திரை உலகத்தை மீட்டெடுத்திட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு அளித்திருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களிடம் வி.பி.எப். கட்டணம் குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திடவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் முனைவர் வி.ப.ஜெயசீலன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி கலந்துகொண்டனர்.

மக்கள் தொடர்பு: கிளாமர் சத்யா.