காவலர்களின் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவின்பேரில், பூக்கடை காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு.மகேஷ்வரன், இ.கா.பஅவர்கள் மேற்பார்வையில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், நேற்று(05.01.2022) பூக்கடை காவல் மாவட்டத்தில் பூக்கடை, யானைக்கவுனி, ஏழுகிணறு மற்றும்வடக்குகடற்கரை ஆகிய பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா மற்றும் ஒமைக்ரான்விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிபின்பற்றுதல், திரவ சுத்திகரிப்பானை உபயோகித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளைஏற்படுத்தி, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.