சென்னை பெருநகர காவல் குதிரைப்படை பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண் காவலர்களுக்கு பாராட்டு.

சென்னை குதிரைப்படை 1780ம் ஆண்டு, சென்னை மாகான ஆளுநர் திரு.வில்லியம்லாங்கன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுவந்தது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இப்படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல்கண்காணிப்பாளர் திரு.வால்டர் கிராண்ட் அவர்களால், சென்னை காவல்துறைக்குபயன்படுத்தப்பட்டு வந்ததுஅதன் பிறகு 1926ம் ஆண்டு முதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜன்ட்தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணிமேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பிறகு சென்னை காவல் குதிரைப்படையில் பல்வேறுமாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது, சென்னை பெருநகர காவல் மோட்டார் வாகனப்பிரிவு, துணை ஆணையாளர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் (தலைமையிடம்) தலைமையில்சென்னை பெருநகர காவல் குதிரைப்படை எழும்பூரில் இயங்கி வருகிறது.

சென்னை பெருநகர காவல் குதிரைப்படையின் தலையாய பணியானது, தினசரிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணிகள்மேற்கொள்வது ஆகும். மேலும், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, குடியரசு தினம் மற்றும்சுதந்திர தின அணி வகுப்பு, பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணி, அரசுமற்றும் காவல்துறை இணைந்து நடத்தும் அரசு நிகழ்ச்சிகளில் அலங்கார அணி வகுப்பு,முக்கிய பிரமுகர்களின் அலங்கார அணி வகுப்பு மற்றும் இதர பாதுகாப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுதற்போது, சென்னை பெருநகர காவல் குதிரைப்படையானது                     27குதிரைகளை கொண்டு இயங்கி வருகிறது. மேற்படி 27 குதிரைகளும், காவல் ஆளிநர்களின்கட்டுப்பாட்டில், காவல் ஆளிநர்களுடன் ரோந்து பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளைசெய்து வருகிறது. ப்பிரிவில் 1 உதவி ஆய்வாளர், 25 ஆண் காவல் ஆளிநர்கள் மற்றும் 5 பெண் காவலர்கள் மேற்படி 27 குதிரைகளையும் பராமரித்து, பணி செய்து வருகின்றனர். குதிரைப்படையைச் சேர்ந்த முதல்நிலை பெண் காவலர்கள் 1.திருமதி.M.ஜாஸ்மின்,(மு.நி.பெ.கா.29738), 2.P.சுகன்யா (மு.நி.பெ.கா.30226), பெண் காவலர்கள் 3.R.மாளவிகா(பெ.கா.54215), 4.T.புனிதா (பெ.கா.54222), 5..C.மஹாலஷ்மி (பெ.கா.54892) ஆகியோர்ஆண்களுக்கு நிகராக குதிரைகளை பராமரித்தும், குதிரைகளுக்கு பயிற்சி அளித்தும், குதிரைகள் மீது அமர்ந்து, பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள் மேற்கொண்டுவருகின்றனர். இதனால் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்று, மிகுந்தஉற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் சிறப்பாக காவல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், 2020ம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற 38வது அகில இந்தியகாவல் குதிரைப்படையினருக்கான விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு காவல்குதிரைப்படை சார்பாக பெண் காவலர் P.சுகன்யா (மு.நி.பெ.கா.30226) கலந்து கொண்டு2ம் பரிசு பெற்றார். மேலும், 2022ம் ஆண்டுக்கான 39வது  அகில இந்திய காவல்குதிரைப்படை விளையாட்டு போட்டிக்கு குதிரையுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகிறார்.

2. புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை நேர்மையாககாவல் நிலையத்தில் ஒப்படைத் வடமாநில நபர் உட்பட இருவருக்கு பாராட்டுமேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தின் மொல்லா, வ/33, த/பெ.மன்னன் முல்லா,  என்பவர் சென்னை, தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவில் உள்ள வீட்டில்தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தின் மொல்லா கடந்த15.01.2022 அன்று காலை சுமார் 09.30 மணியளவில், புது வண்ணாரப்பேட்டை, வ.உ.சி.நகர் மார்க்கெட் மெயின் ரோடு அருகில் நடந்து சென்றபோது, சாலையில் ரப்பர்பேன்டால் சுற்றப்பட்ட பணம் இருந்ததை கண்டு எடுத்தார். எண்ணி பார்த்தபோது, பணம்ரூ.52,000/- இருந்ததும், அப்பகுதியில் யாரும் உரிமைக் கோராததால், தின் அவருக்குதெரிந்த நபரான அப்பகுதியைச் சேர்ந்த ஜீவகுமார், வ/54, த/பெ.ராஜேந்திரன் என்பவரிடம்தெரிவித்து, இருவரும் சேர்ந்து சாலையில் கிடந்த பணம் ரூ.52,000/-ஐ H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை பெருநகர காவல், குதிரைப்படையில் சிறப்பாக பணியாற்றி வரும் 5 பெண்காவலர்கள் மற்றும் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் பணத்தை நேர்மையாககாவல் நிலையத்தில் ஒப்படைத்த மதின் மொல்லா மற்றும் ஜீவகுமார் ஆகியோரை,சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் இன்று(17.01.2022) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.