படைப்பாளிகளின் கற்பனைக்கு அரசாங்கம் தனது அதிகாரத்தால் அணைகட்ட எண்ணுவது மடமை. சமூக மாற்றத்திற்கான விதையை தங்களது படைப்புகளில் வெளிக்கொணரும் கலைஞன் மீது சுய விருப்பு, வெறுப்புகளை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு – 2021 ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மத்திய அரசு தடை செய்வதற்கோ, மறுபரிசீலனை செய்ய சென்சார் போர்டிற்கு உத்தரவிடுவதற்கோ வழிவகுத்து திரைப்பட கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக அமைந்துள்ளது. இச்சட்ட வரைவு நீதிமன்ற உத்தரவிற்கும் முரணானது என்பதால் மத்திய அரசு உடனடியாக ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவுகளை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.