இயந்திர பாதிப்புகளை தானே சரிசெய்து கொள்ளும் பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

விண்கலங்கள் போன்றவற்றில் உள்ள பழுதடைந்த மின்னணு உபகரணங்கள் தங்களை தாங்களே சரிசெய்து கொள்ள வைக்கும் புதிய பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நமது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் இயந்திர பாதிப்பின் காரணமாக அவ்வப்போது செயலிழந்துஅவற்றை நாம் செப்பனிடவோமாற்றவோ வைக்கின்றன. இதன் மூலம் உபகரணங்களின் ஆயுட்காலம் குறைந்து பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கின்றன. விண்கலங்கள் போன்ற பல்வேறு இடங்களில் கோளாறுகளை சரி செய்வதற்கான மனித தலையீட்டுக்கு சாத்தியமில்லை. 

இந்த தேவைகளை மனதில் கொண்ட இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎஸ்ஈஆர்)கொல்கத்தாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்பைசோஎலெக்ட்ரிக் மாலிக்கியூளர் கிரிஸ்டல்கள் எனும் தங்களை தாங்களே செப்பனிட்டுக் கொள்ளும் பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். இயந்திரவியல் தாக்கத்தின் போது மின்சாரத்தை உற்பத்தி செய்து இவை தங்களை தாங்களே சரி செய்துக் கொள்ளும். 

பதிப்பக இணைப்பு: 10.1126/science.abg3886

மேலும் விவரங்களுக்குபேராசிரியர் சி மல்லா ரெட்டி (cmallareddy@gmail.com), பேராசிரியர் நிர்மால்யா கோஷ் (nghosh@iiserkol.ac.inஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.